Friday, 14 December 2012

படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது,,,,,,

திருமண வாழ்வை தக்க வைக்கும் இனிமையான நினைவுகள்!!!

இந்த மார்டன் உலகில் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் பெரும் மன அழுத்தத்துடன் செல்கிறது. அவ்வாறு செல்லும் வாழ்க்கையில் மன அழுத்தம் இருப்பதோடு, மண வாழ்க்கையில் உள்ள சந்தோஷத்தைக் கெடுக்கும் வகையில் இருக்கிறது. ஒரு காலத்தில் திருமணம் நடந்தால், அந்த தம்பதிகள் என்ன நடந்தாலும் இறுதி வரை ஒன்றாக வாழ்ந்து வருவர். ஆனால் தற்போது, வாழ்வில் ஏதேனும் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டால், அந்த வாழ்க்கை இறுதி வரை செல்லாமல், பாதியிலேயே முடிந்துவிடுகிறது. அதுவும் விவாகரத்து வரை செல்வதோடு, அந்த விவாகரத்தும் எளிதில் கிடைத்து பிரிந்து விடுகின்றனர். வாழ்வில் சந்தோஷம் மட்டும் என்பதில்லை, கோபமும் தான் இருக்கும். அவற்றையெல்லாம் வெற்றி பெற்று வாழ்வை வாழ்ந்து காண்பிப்பது தான் சிறப்பான ஒன்று. ஆகவே எந்த பிரச்சனைகள் வரும் போதும், நமது கோபத்திற்கு இடத்தை கொடுக்காமல், வாழ்க்கையின் உண்மையை உணர முயற்சிக்க வேண்டும். அதற்கு எத்தனை நாட்கள் ஆனாலும் சரி, பொறுமையோடு, விவகாரத்து தான் இதற்கு வழி என்று எண்ணாமல், மனதை அமைதிப்படுத்தி, ஒன்று சேர்வதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். அவ்வாறு எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், அந்த கஷ்டமான தருணத்தை மட்டும் எண்ணாமல், சந்தோஷமாக இருந்த தருணத்தை நினைத்து, மனதில் இருக்கும் கோபத்தை வெளியேற்ற வேண்டும். சரி, இப்போது பிரச்சனை வந்தால், அந்த பிரச்சனையை நினைக்காமல், எந்த மாதிரியான இனிமையான நினைவுகளையெல்லாம் நினைத்து, திருமண வாழ்விற்கு முற்று ஏற்படாமல், நீண்ட நாட்கள் நிலைக்க வைப்பது என்பதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்

முதல் நாள்

 முதல் நாள் உங்கள் துணைவரை நேருக்கு நேராக கண் இமைக்காமல் பார்க்கும் படி செய்த அல்லது உங்கள் மனதில் காதல் எண்ணத்தை ஊட்டிய அந்த நாள் மிகவும் ஸ்பெஷலான மறக்க முடியாத ஒரு இனிமையான நாள்.

நண்பர்கள்
நட்பு மற்றும் சந்தோஷமாக இருப்பது தான் ஒரு உறவின் முக்கியமான ஒரு பகுதி. இந்த நாட்களை வாழ்க்கை முடியப் போகும் தருணத்தில் நினைத்துப் பார்த்தால், அனைத்தும் கவலைகளும் மறந்து வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

காதலில் விழுந்த நாள்

ஒருவருடன் பழகும் போது, நிச்சயம் ஒரு காலகட்டத்தில் அவரின் மீது காதல் இருப்பது புரிய வரும். அப்போது உணர்ந்த அந்த இனிமையான அனுபவத்தை நினைத்தால், அது வாழ்வில் மற்றும் மனதில் ஒருவித குதூகலத்தை உண்டாக்கும்.


முதல் நெருக்கமான தருணம்

 இது முதன் முதலில் இருவரும் முத்தம் கொடுத்ததாகவோ அல்லது வேறு ஏதாவதான ஒருவித உணர்வை உணர்ந்த நாளாக இருக்கும். அதிலும் இந்த தருணத்தின் போது எப்போதுமே இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று மனதில் தோன்றியிருக்கும்.

முதல் வெளிப்படுத்திய நாள்

 எதிர் பார்க்காத நேரத்தில் வாழ்க்கைத் துணை அதிர்ச்சியூட்டும் வகையில் காதலை சொன்ன அந்த நாளை யாராலும் மறக்க முடியாது.


திருமணத்திற்கான ஷாப்பிங்

 வீட்டில் திருமணத்திற்கான ஷாப்பிங் செய்யும் போதோ அல்லது அதற்கான ஏற்பாடுகளை செய்யும் போதோ நடக்கும் சம்பவங்கள் எப்போதுமே வாழ்வின் ஒரு சந்தோஷமான நாளாக இருக்கும்.


திருமண நாள்

வாழ்வில் அனைவரும் எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நாள் தான் திருமண நாள். அந்த நாளன்று இதுவரை தனியாக, காதலராக இருந்தவர்கள் ஒன்றாக இருக்கப் போகிறீர்கள் என்று பெரியோர்கள் அனைவரும் வாழ்த்துக் கூறி சேர்த்து வைக்கும், மனதின் ஆசையை நிறைவேற்றிக் கொண்ட நாள்.


தேனிலவு பயணம்

வாழ்வின் யாராலும் மறக்க முடியாத ஒரு பயணம் என்றால் அது தேனிலவு தான். அதிலும் இந்த பயணத்தின் போது அவர்கள் அந்த பயணத்தின் நினைவாக வளைத்து வளைத்து போட்டோக்களை எடுத்துக் கொள்வார்கள்.

முதல் சண்டை

திருமணத்திற்கு பிறகு சண்டைகள் நிறைய வரும். ஆனால் முதல் சண்டையை மட்டும் யாராலும் மறக்க முடியாது. அதிலும் அவ்வாறு வரும் சண்டை ஏதேனும் ஒரு சிறு விஷயத்திற்காகத் தான் இருக்கும்.

பெற்றோர் ஆன நாள்

 இந்த தருணம் தான், தம்பதிகளுக்கிடையே இருக்கும் அன்பின் அடையாளம். சொல்லப்போனால் இதுவரை சாதாரணமாக இருந்த அவர்கள் பெற்றோர் என்ற உயர்ந்த நிலையை அடைந்த நாள்.

















Saturday, 24 March 2012

ஸ்ரீ’ன் சிந்தியதும் சிதறியதும்: நினைவுகள்,,,,,,

ஸ்ரீ’ன் சிந்தியதும் சிதறியதும்: நினைவுகள்,,,,,,: காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் ஆனால், மாறாத வடுக்களாக நினைவுகள் நிச்சயம் இருக்கும்,,,,,, - ஸ்ரீ ஸ்கந்த ராகுலன் -

நினைவுகள்,,,,,,


காலங்கள்
மாறும்
காட்சிகள்
மாறும்
ஆனால்,
மாறாத
வடுக்களாக
நினைவுகள்
நிச்சயம் இருக்கும்,,,,,, - ஸ்ரீ ஸ்கந்த ராகுலன் -

Friday, 16 March 2012

துப்பட்டா!!!!!!!!!!

தாளாத
கடுப்பு
எனக்கு
உன்
துப்பட்டா
மீது.

எனக்கு
கிடைக்காத
இடத்தில்
இருந்துகொண்டு
உனக்கு
இம்சையைக்
கொடுக்கிறது
கீழே
விழுந்து
விழுந்து,,,,,,,,
                                - ஸ்ரீ ஸ்கந்த ராகுலன்-

Wednesday, 15 February 2012

ஏனடி!!!!!!!!!!

என்
காதல்ஜோதிதான்
அதற்க்காக
என்
இதயத்தை
இப்படியா
எரிப்பது,,,,,,,,,,,,,,

என்
இதயம்
மெழுகானால்
உனக்காக
எத்தனைமுறை
வேண்டுமானாலும்
உருகுவேன்,,,,,



நான்
நெருப்பனால்
உனக்காக
வேண்டும்போதெல்லாம்
எரிவேன்
நீ
என்னையே
எரித்தாலும்,,,,,

ஆனால்
நீயோ
வார்த்தைகளால்
என்னையே
எரிக்கிறாய்,,,,,
என்னையே
மெழுகாக
உருக்குகிறாய்,,,,,

என்னச்
செதுக்கி
நீ
சிற்பியானாலே
பெருமை,,,

நீயோ!
என்னில்
நீ
இருக்கும்
இதயக்கோயிலை
இடிக்கும்
நெடுஞ்சாலைத்துறைபோல,,,,,,,,,,,


மெழுகுபோல
நானும்
என்
முடிவுவரை
உனக்காகவே
உருகுவேன்,,,,

நீ
அதை
பாதியில்
அணைக்கும்
தீயணைப்புத்துறை
ஆகாதே !!

Tuesday, 7 February 2012

மனசு!!!

மனசு

சில
நேரங்களில்
பேச்சுக்கினங்கா
மழலைகலைப்போல
துள்ளியாடும்,,,,

சில
நேரங்களில்
முதிவர்களின்
பொறுமையயைப்போல்
பொறுத்தாளும்,,,

மனிதன்
கணிக்க
இயலாத
கணிதமாகவும்
மனசு,,,,,!                                    - ஸ்ரீ ஸ்கந்த ராகுலன் -

Monday, 6 February 2012

காமம்,,,,,

கணவனும்
மனைவியும்
உள்ளூர
ஊடுருவி
கண்டறியும்
உன்னதமான
இன்பம்,,,,

கணவனுக்காக
மனைவியும்
மனைவிக்காக
கணவனும்
விட்டுக்கொடுக்கும்
விரசமான
அன்பு,,,,,,,,,

இரு
மனங்களின்
ஈடுஇணையில்லா
பாசம்
கூடும்
மையப்புள்ளி,,,,
- ஸ்ரீ ஸ்கந்த ராகுலன் -

Sunday, 5 February 2012

சாராயம்,,,,,,,,சிந்தீருச்சுங்க,,,,

சாராயம்

காதலித்து
தோற்றவனின்
மரத்துப்போன
சிறு மூலையய்
சிலுசிலுப்பாக்கும்
சிறு
அமிர்தம்,,

குடும்பத்தலைவன்
குடைச்சல்கள்
குறைய
குடிக்கும்
குறும்பானம்,,,,

பாரம்பரியமாக
காய்ச்சும்
பெருசுகளின்
சோமபானம்,,,,,..


(ஓம் சரக்காய நமஹ!!!!!!!)   -ஸ்ரீ ஸ்ரீ ஸ்கந்த ராகுலானந்தா-

Thursday, 2 February 2012

நீ சிணூங்கியதனால்,,,,,, சிந்தியது

நீ
சிணுங்கும்போழுது
சுருங்கும்
முகம்
என்னிலிருந்து
அதிகமான
அன்பை
இழுக்கிறது,,
இதுதான்
புவி ஈர்ப்போ!!!

சுருங்கும்
உன்
முகம்
மலரும்பொழுது
இழுக்கப்பட்ட
மொத்த
அன்பும்
உன்
உதட்டுச்(அசட்டுச்)
சிரிப்பில்,,,,,,
-ஸ்ரீ ஸ்கந்த ராகுலன்-

Thursday, 26 January 2012

மாலைநேரத்து மயக்கம்,,,,சிந்தியது

கலகலப்பான
உரையாடல்கள்
நண்பர்களுடன்,,,,
உரையாடல்களுக்கிடையே
உள் வாங்கிச்செல்கிறது
மூச்சு
உன்னை நினைத்து!!!
தேநீர்
பருகும்போது
கற்பனையின்
மிதப்பில்
உன்
நினைவுகள்!!!
மாலை
நேரத்தில்
நான் கொண்ட
மயக்கத்தில்
நீ!!!!

Wednesday, 11 January 2012

மரம்,,,,,,,, (மனிதனின் மனம்)

இருக்க
நிழலிடம்
கொடுத்து
படுக்க
பர்னிச்சரைக்-
கொடுத்த
மரத்தை
அழித்து,
தானும்
அழிகிறான்
மனிதன்,,,,,
மரம் வளர்ப்போம்!!!!!     - ஸ்ரீ ஸ்கந்த ராகுலன் -

Monday, 9 January 2012

சிதறியது,,,,, வலி

சிற்பிக்கும்
உனக்கும்
ஒரு
வித்தியாசம்தானடி,
சிற்பி
கல்லை
சிலையாக
அழகாக
வடிவமைக்கிறான்.
நீ
என்னைத்திட்டி
கொலையாகக்
கொன்று
குவிக்கிறாய்,,,,,,
நான் நடைபிணமாக,,,,,,,,,               -ராகுல் ஸ்ரீ-

Wednesday, 4 January 2012

வீணான உழைப்பு,,,,,,, உருவாக்கும் பசி,,,,,

நாள்
முழுக்க
பம்பரமாய்
உழைத்த
தொழிலாளி,

பம்பரம்போலே
விழுந்தான்
மாலை நேரம்
சாராயத்தால்(டாஸ்மாக்).

சாராயம்
கண்ணீராய்
அவனது
மனைவி
மற்றும்
குழந்தைகள்
கண்ணில்,,,,,,,, பசியாய்!!!!                       -ஸ்ரீ ஸ்கந்த ராகுலன்-